நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: நாகையில் நாளை உள்ளூர் விடுமுறை

நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: நாகையில் நாளை உள்ளூர் விடுமுறை
Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தையொட்டி, நாகை மாவட்டத்துக்கு நாளை(ஜூலை 12) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகை மாவட்டம் நாகூர் நாகநாதர் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை(ஜூலை 12) நடைபெற உள்ளது.

நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ்
நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ்

இதையொட்டி, நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 30-ம் தேதி நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் செயல்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in