மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்கின்றனர் - தயார் நிலையில் விசைப்படகுகள்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்கின்றனர் - தயார் நிலையில் விசைப்படகுகள்
Updated on
2 min read

மீன்பிடித் தடைக்காலம் நேற்று டன் நிறைவடைந்ததை அடுத்து தமிழகத்தின் 13 கடற்கரை மாவட் டங்களைச் சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 15,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்.

மீன்களின் இனப்பெருக்கத் துக்காக ஏப்ரல் 15 முதல் மே 29-ம் தேதி வரை 45 நாட்கள் விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படு வது வழக்கம். இந்த காலகட் டங்களில் யாரும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதில்லை.

இதனால் மீன்வரத்து குறை வதால் தடைக்காலங்களில் மீன் விலை அதிகரிக்கும். பிற பகுதி களில் இருந்து கொண்டுவரப் படும் மீன்களே அதிக விலைக்கு விற்கப்படும்.

மீன் வளத் துறையினர் ஆய்வு

மீன்பிடித் தடைக்காலத்தை யொட்டி விசைப் படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சீர மைக்கும் பணி நடைபெற்றது. சீரமைப்புப் பணி முடிக்கப்பட்ட படகுகள் கடலில் விடப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. படகுகள் தரமாக இருக்கிறதா என்பதை மீன் வளத் துறையினர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், நேற்றுடன் மீன்பிடித் தடைக்காலம் நிறை வடைந்தது. இதையடுத்து, இன்று முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர்.

நாகை

நாகை மாவட்டத்தில் பழை யாறு, திருமுல்லைவாசல், தென் னம்பட்டினம், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, சின்னங்குடி, நாகூர், சில்லடி, நாகை, வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், ஆறுகாட் டுத்துறை, வேதாரண்யம், கோடி யக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள், தங்களது ஆயிரக்கணக்கான விசைப்பட குகளை மீன்பிடித் தளங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் தளங்களில் இருந்து சுமார் 550 விசைப் படகுகளில் 2,500 மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சனி, திங்கள், புதன்கிழமைகளில் கடலுக்குச் சென்று, அடுத்தடுத்த நாட்களில் கரை திரும்புவர். வெள்ளிக்கிழமை வார விடுமுறை.

இதுகுறித்து கோட்டைப்பட் டினம் மீனவர் ஆர்.ரவிச்சந்திரன் கூறும்போது, “மீனவர்களின் குடும் பத்துக்கு வழங்கப்படும் மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை ரூ.5 ஆயிரமாக தமிழக அரசு உயர்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. படகுகளைச் சீரமைப்பதற்கு சுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை செலவாகிறது.

எனவே, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீனவர்களுக்கு வழங்குவதைப்போல, எங்களுக் கும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும். புதிய வலை, ஐஸ் பெட்டி, சீரமைக்கப்பட்ட படகுகளுடன் 45 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்கிறோம். மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்று நம்புகிறோம். இதனால் மீன்களின் விலை குறையும்” என்றார்.

ராமேசுவரம்

அதேபோல் ராமேசுவரம் மீனவர்களும் கடலுக்குச் செல்ல தயராக உள்ளனர். அதேநேரம் இலங்கை கடற்படையின் தொந் தரவு இருக்குமோ என்ற அச்ச மும் அவர்களிடம் உள்ளது. ராமநாத புரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, வாலிநோக்கம், தொண்டி, எஸ்பி பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 1500-க்கும் மேற் பட்ட படகுகள் மீன்பிடிக்கச் செல்ல உள்ளன.

மீன்பிடி தடை காலத்தில் மீன வர்கள் படகுகளையும், வலை களையும் புதுப்பித்தனர். படகுக ளுக்கு பாதுகாப்பு கருதி அரசு உத்தரவுப்படி பச்சை வர்ணம் அடித்தனர். இந்நிலையில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து திங்கட்கிழமை புதிய மீன்பிடி காலம் தொடங்குகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடி துறை முக வளாகத்தில் உள்ள புனித அமலோற்பவ மாதா சிற்றால யத்தில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் விசைப் படகு உரிமையாளர்கள், தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், விசைப்படகுகளில் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை ஏற்றி மீன வர்கள் தயார்படுத்தினர். இன்ஜி னுக்கு டீசல் நிரப்பினர். கடலுக்கு செல்ல தேவையான டீசலை கேன்களில் வாங்கி வந்து படகுகளில் தயாராக வைத்தனர்.

மீன்களை பதப்படுத்துவ தற்கான ஐஸ் பார்கள் நேற்று இரவில் படகுகளில் ஏற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக விசைப்படகு கள் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.

45 நாட்கள் கழித்து கடலுக்கு செல்வதால் மீனவர்கள் உற்சாக மாக உள்ளனர். கடந்த ஆண்டில் மீன்பாடு சரியாக இல்லாததால் பல படகுகள் சரியாக கடலுக்கு செல்லவில்லை.

இந்த ஆண்டாவது நல்ல மீன் பாடு இருக்கும் என்ற நம்பிக்கை யில் கடலுக்கு செல்வதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in