மீன்வர் வலையில் சிக்கிய அரிய வகை முல்லர் மீன்

மீன்வர் வலையில் சிக்கிய அரிய வகை முல்லர் மீன்
Updated on
1 min read

அரிய வகை மீனான முல்லர் பழவேற்காடு மீனவர் வலையில் சிக்கியது. இதன் 450 கிலோ எடை இருந்தது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அரங்கங்குப்பம் மீனவர் தேசப்பன் தனது குழுவினருடன் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் சென்றார். பெரிய அளவில் மீன்கள் சிக்காத நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பினர். அப்போது கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரப் பகுதியில் துள்ளிக் குதித்த வால் இல்லா ராட்சச மீன் அவர்கள் வலையில் சிக்கியது.

இது ஏழரை அடி உயரமும், 450 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. இதனால் மீனைப் படகில் ஏற்ற முடியாததால், கயிற்றால் கட்டி கடற்கரைக்கு இழுத்து வந்தனர். வலையில் சிக்கிய அந்த ராட்சச மீன் அரிய வகை இனமான முல்லர் என மீனவர்கள் தெரிவித்தனர். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் பார்த்து ரசித்தனர்.

நீண்ட நாட்கள் கடலில் வாழ்ந்து, அதிக எடையுடன் கூடிய அரிய வகை மீன்கள் வலையில் சிக்கினால் அவற்றை மீண்டும் நீரில் விடுவது மீனவர்களின் வழக்கம். அந்த வகையில் அரிய வகை மற்றும் அதிக வயது கொண்ட முல்லர் மீனைப் பழவேற்காடு ஏரி பகுதியில் விடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in