தமிழகத்தில் மத மாற்றம் தடை சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும்: இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் | கோப்புப் படம்
இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் | கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழகத்தில் மதமாற்றம் தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று அர்ஜூன் சம்பத், செய்தியாளர்களிடம் கூறும் போது, “75-வது சுதந்திர விழாவை, இந்தியாவே கொண்டாடி வருகிறது. அதே போல், தமிழகத்திலும் கொண்டாட்டங்களை நடத்திட வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்க வேண் டும்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டதாக கூறுவது விளம்பரத்துக்கு மட்டுமே. பல கோயில்களில் ஒரு கால பூஜைக்கே வழியில்லாமல் உள்ளது.

தமிழகத்தில் மதமாற்றங்கள் அதிகளவில் நடந்து வருகிறது. பட்டியல் இனத்தவர்களை குறிவைத்து மதமாற்றம் நடக்கிறது. மதமாற் றத்தை திமுக ஆதரிக்கிறது. சிஎஸ்ஐ மாநாட்டில், இது உங்கள் ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

எனவே, திமுகதான் மதவாத அரசியலை செய்கிறது. தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை கடை பிடிக்கிறது. திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் நினைக்கின்றனர். தற்போது, தேர்தல் நடைபெற்றால் திமுகவுக்கு உள்ள எதிர்ப்பு தெரியவரும்” என்றார்.

தமிழகத்தில் மதமாற்றங் கள் அதிகளவில் நடந்து வருகிறது. பட்டியல் இனத்தவர்களை குறிவைத்து மதமாற்றம் நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in