பூந்தமல்லி - கோயம்பேடு இடையே நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு: காவல் துறை எச்சரிக்கை

பூந்தமல்லி - கோயம்பேடு இடையே நாளை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு: காவல் துறை எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுக்குழு காரணமாக நாளை (ஜூலை11) பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு நாளை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதன் காரணமாக பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்து காவல்துஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வானகரத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வு காரணமாக பூந்தமல்லி - கோயம்பேடு இடையில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இதற்கு ஏற்றார் போல் தங்களது பயணத்தை திட்டமிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in