தமிழகத்தில் புதிய உச்சத்தில் காற்றாலை மின் உற்பத்தி

தமிழகத்தில் புதிய உச்சத்தில் காற்றாலை மின் உற்பத்தி

Published on

சென்னை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதன்படி நேற்று (ஜூலை 9) அதிகபட்சமாக 120 மெகா யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று பலமாக வீசும். இந்த காலகட்டத்தில் காற்றாலைகள் மூலம் அதிக அளவு மின்சாரம் உற்பத்தியாகும்.

ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே காற்று காலம் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி 111 மெகா யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. இந்நிலையில், நேற்று இதைவிட அதிகபட்ச மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது. இதில் நேற்று மட்டும் காற்றாலைகள் மூலம் 120 மெகா யூனிட் மின்சாரம் உற்பத்தியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in