அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய நவீன அடையாள அட்டை

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு க்யூஆர் கோடுடன் கூடிய நவீன அடையாள அட்டை
Updated on
1 min read

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள உறுப்பினர்களுக்கு ஆர்எப்ஐடி முறையில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. இதற்காக நவீன ஸ்கேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழு நாளை (ஜூலை 11 ஆம் தேதி ) வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தனியார் மண்டபத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்களுக்கு க்யூஆர் கோடு அடங்கிய ஆர்எப்ஐடி முறையிலான நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அடையாளஅட்டைகளை ஸ்கேன் செய்ய அதிநவீன நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 16 அதிநவீன நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. க்யூஆர் கோடு அடையாள அட்டை உள்ளவர்கள் தங்களது அட்டையை இதில் நுழைவு வாயிலில் ஸ்கேன் செய்து அது உண்மையானது என்று உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அனைவரும் உள்ளே அனுமதிக்கபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in