நீட் இளநிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

நீட் இளநிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: இளநிலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான 'நீட்' தேர்வு வரும் 17-ஆம் தேதி தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதன்படி தேர்வு விண்ணப்பங்களை சமர்பித்தவர்கள் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் தங்களின் பதிவு மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in