

தமிழகத்தில் கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் வெயிலில் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சமய புரத்தில் 6 செமீ, பேச்சிப்பாறை, சாத்தூரில் தலா 5 செமீ, நீலகிரி மாவட்டம், சிவகங்கையில் தலா 4 செமீ, சேலம், படலூர், அருப்புக்கோட்டை, புள்ளம்பாடி யில் தலா 3 செமீ, குன்னூர், போடி நாயக்கனூர், அறவங்குறிச்சி, கோத்தகிரி, லால்குடி, உத்தம பாளையத்தில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
ஒருபுறம் மழை பெய்து வந்தா லும் சில பகுதிகளில் வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதிகபட்ச மாக திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ், சேலம், வேலூரில் 39 டிகிரி செல்சியஸ், மதுரை யில் 38 டிகிரி செல்சியஸ், சென்னை, அதிராம்பட்டினம், கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளியில் தலா 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடலோர தமிழகம், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய் யும். சென்னையில் வானம் மேகமூட் டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.