

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மூத்த மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள தொண்டர்கள் 1000 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்துடன் கூடிய பொற்கிழி விருது வழங்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் திருப்பாலையில் நடந் தது.
கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:
மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு 1,336 பேருக்கு பொற் கிழி வழங்கப்பட்டது.
அதேபோன்ற விருது வழங்கும் விழா வரும் 23-ம் தேதி மதுரையில் நடக்க வுள்ளது. இந்த விருதை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வழங்க உள்ளார்.
ஏழ்மை நிலையில் உள்ள கட்சியின் மூத்த உறுப் பினர்களை இவ்விருதுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும்.
திமுகவில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிப்பதில் எந்த தவறும் இல்லை. அவர் தேர்தலின் போது சுற்றுப் பயணம் செய்து வெற்றிக்கு பாடுபட்டது அனை வருக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் ஏராள மான திமுக நிர்வாகிகள் பங் கேற்றனர்.