

புதுச்சேரியிலுள்ள திரையரங்கம் வாக்குச்சாவடியாக மாறியது. தியேட்டருக்கு டிக்கெட் எடுத்து படம் பார்க்க செல்வதுபோல் வாக்களிக்க வந்த மக்கள் வரிசையாக நின்று வாக்களித்தனர்.
புதுச்சேரி மூலக்குளத்தில் வசந்தராஜா திரையரங்கம் உள்ளது. உழவர்கரை தொகுதியிலுள்ள இத்திரையரங்கில் கோ-2 திரைப்படம் வெளியாகியிருந்தது.
தேர்தலையொட்டி திரையரங்கில் நேற்றும், இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டது.
அதையொட்டி ஏராளமான பொதுமக்கள் திரையரங்கான வாக்குச்சாவடிக்கு வந்தனர். திரையரங்கில் படம் பார்க்க டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்பது போல் வரிசையாக நின்று வாக்களித்தனர்.
திரைப்பட போஸ்டர்கள் மத்தியில் வாக்களிக்கும் இடம், பூத் சாவடி எண் என்று அனைத்தும் அச்சிடப்பட்டிருந்தது.