

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக தேர்தல் நடத்தும் அதிகாரி வழங்கிய சான்றிதழை, முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று மதுசூதனன் ஒப்படைத்தார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, திமுகவின் சிம்லா முத்துச்சோழனை விட, 39 ஆயிரத்து 545 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜாவிடம் இருந்து, அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் நேற்று முன்தினம் பெற்றார்.
இத்தகவலை அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்து உள்ளது.