

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் திமுக, அதிமுக என அதிகபட்சமாக நான்கு வாரிசுகள் வேட்பாளர்களாகக் களம் இறங்கி உள்ளனர்.
நிலக்கோட்டை
நிலக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் 1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று எம்எ ல்ஏவாக தேர்வு செய்யப் பட்டவர் முனியாண்டி. தற்போது, இந்தத் தொகுதியில் அவரது மகன் வழக்கறிஞர் மு. அன்பழகன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அவர் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு குறிப்பிட்ட செல் வாக்கு இருப்பதால், இதைக் கொண்டு கரையேறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார். தேமுதிக எந்த அளவுக்கு அதிக ஓட்டுக்களை பெறுகிறதோ, அந்த அளவுக்கு அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை நிலக்கோட்டை தொகுதியில் உள்ளது.
வேடசந்தூர்
இந்ததொகுதியில் 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் வி.பி.பாலசுப்பிரமணி. துணை சபாநாய கராகவும் பதவி வகித்தார். இவரது மகன் வி.பி.பி. பரமசிவம் தற்போது அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த் து காங்கிரஸ் சார்பில் சிவசக் திவேல் போட்டியிடுகிறார். கடந்த தேர்தல்களில் 1989 முதல் இந்த தொகுதியை அதிமுகவும், திமுக கூட்டணியும் மாறி, மாறி கைப்பற்றி வந்துள்ளன. இதன்படி பார்த்தால் இந்த முறை இந்த தொகுதி திமுக கூட்டணியான காங்கிரஸுக்கு கிடைக்கும் என்கின்றனர் திமுகவினர். கடந்த முறை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். இதனால் கூட்டணி பலம் இன்றி, இந்த தொகுதியை எளிதில் கைப்பற்றுவோம் என்கின்றனர் அதிமுகவினர். வாரிசு கரையேறுவாரா என்பது அவரது தீவிர பிரச்சாரம் மக்களிடம் எந்த அளவுக்கு எடுபடும் என்பதைப் பொருத்து உள்ளது.
நத்தம்
நத்தம் தொகுதி 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் ஆறு முறை தொடர்ந்து காங்கிரஸ், தமாகா சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆண்டி அம்பலம். அவரது மகன் ஏ. ஆண்டி அம்பலம் தற்போது திமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக, காங்கிரஸ் ஓட்டுக்கள் மற்றும் ஜாதி பலத்தை நம்பி உள்ளார். எதிர்த்து வழக்கமாக இந்த தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விசுவநாதன் இல்லாததால், திமுகவினர் சற்று தெம்புடன் பிரச்சாரம் செய்கின்றனர். ஏற்கெனவே, தேர்தலில் நின்று தோற்றவர் என்ற அனுதாபமும் மக்களிடம் உள்ளது. தந்தை பெயரை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் திமுகவினர் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
பழநி
பழநி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இ.பெ. செந்தில்குமார். முன்னாள் அமை ச்சரும், தற்போது ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் இ. பெரியசாமியின் மகன் ஆவார். கடந்த முறை, பழநி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றவர். தற்போது, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். சென்ற முறை போட்டியிட்டதால் தொகுதி முழுவதும் அறிமுகம் உள்ளது. இந்தமுறை எப்படியும் வெற்றி பெற்றாகவேண்டும் என முனைப்புடன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கொடைக்கானல் ஒன்றிய மலை கிராமங்கள் ஒன்றுவிடாமல் நடந்துசென்று வாக்கு சேகரித்து வருகிறார். பழநி நகராட்சி தற்போது திமுக வசம்தான் உள்ளது. இதனால், பழநி நகர வாக்காளர்கள், கொடைக்கானல் ஒன்றியபகுதி வாக்காளர்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்ற தன்னம்பிக்கையில் களப் பணியாற்றி வருகிறார். இந்த முறை வெற்றிபெற்றால்தான் அவரது அரசியல் வாழ்க்கை பிரகாசமாகும் என்பதால் திமுகவினர் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி உள்ளனர்.