

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுதான் தொலை பேசி மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும். சில தொகுதிகளில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய் யப்படுவதாக புகார்கள் வந்துள் ளன. அவ்வாறு அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்தால் அதற்கான செலவு சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.
கோடைக் காலங்களில் அரசி யல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நீர்மோர் பந்தல்கள் அமைத்தால் அங்கு கொடி, பேனர், ஸ்டிக்கர் என கட்சி அடையாளங்கள் எதுவும் இருக்கக் கூடாது. நீர்மோர் பந்தல்களில் இருப்பவர்கள் எந்தவொரு கட்சியையும் அடை யாளப்படுத்தும் கரைவேட்டிகளை அணிந்திருக்கக் கூடாது. அரசு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கக் கூடாது.
வேட்புமனு நிராகரிப்பு எப்படி?
வேட்புமனு, பிரமாண பத்திரம், கூடுதல் பிரமாண பத்திரம் ஆகிய வற்றை கண்டிப்பாக தாக்கல் செய்திருக்க வேண்டும். வேட்பு மனு, பிரமாண பத்திரத்தில் எந்த வொரு பகுதியையும் பூர்த்தி செய்யாமல் காலியாக விடக் கூடாது. வேட்பாளருக்கான உறுதிமொழி கண்டிப்பாக எடுக்க வேண்டும். வேட்புமனுவுடன் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். அந்த தொகுதிகளை சேர்ந்தவர்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். இதில் ஏதாவது இல்லை என்றால் வேட்புமனு நிராகரிக்கப்படும்.