வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்: அதிமுகவினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
Updated on
1 min read

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டி யிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதி மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரு மான ஜெயலலிதா நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வியத்தகு வெற்றியை தமிழக மக்கள் அதிமுகவுக்கு வழங்கி உள்ளனர். ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற கொள்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் எனக்கு, நீங்கள் வழங்கி வரும் இணையில்லா அன்பிற்கும், பேராதரவுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

மக்கள் அதிமுகவுக்கு வழங்கி இருக்கும் இந்த மகத்தான வெற் றிக்கு உழைத்த ஒவ்வொருவருக் கும் மீண்டும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். அதிமுக வேட் பாளர்களாக தேர்தல் களத்தில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் வாக்காளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். வெற்றி பெற்ற வேட்பாளர்களும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் தங்க ளது தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப்பகுதி வாக்காளர் களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in