இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி. பதவி நாட்டிற்கே கவுரவம்: மத்திய அமைச்சர் எல்.முருகன்

இசைஞானி இளையராஜாவுக்கு எம்.பி. பதவி நாட்டிற்கே கவுரவம்: மத்திய அமைச்சர் எல்.முருகன்
Updated on
1 min read

புதுச்சேரி: இசைஞானி இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பது நாட்டிற்கே கிடைத்த கவுரவம் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்

புதுச்சேரி நாடாளுமன்ற பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 3 நாள் பயணமாக மத்திய அமைச்சர் முருகன் புதுவைக்கு வந்துள்ளார். நேற்றைய தினம் காரைக்கால் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு காலராவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

2 ஆம் நாளாக இன்று புதுவையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிககளில் கலந்துகொள்ள வந்துள்ளார். கடற்கரை சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தும் பணி நட ந்தது. கடற்கரை சாலை தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முருகன் குப்பைகளை அள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் சரவணக்குமார், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், எம்எல்ஏக்கள் வெங்கடேசன், சிவசங்கரன், ராமலிங்கம், அசோக்பாபு, உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், "இசைஞானி இளையராஜாவிற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பது நாட்டிற்கே கிடைத்த கவுரவம். இளையராஜாவின் திறமையின் மூலமும் இசையின் சாதனைகள் மூலம் நாட்டு மக்களை கட்டிப்போட்டவர். புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக துணிபையை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்." என்று எல்.முருகன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in