

சென்னை: சொத்துவரி உயர்வு திமுக ஆட்சி இனி செய்யப்போகும் கொடுங்கோன்மைக்கான எச்சரிக்கை மணியோ என மக்கள் அஞ்சுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''அனைத்து தரப்பினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பிறகும் மக்கள் படும் இன்னலைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காக வீடுகள் தோறும் திமுக அரசு அனுப்பியிருக்கும் நோட்டீஸ் சொத்து வரி உயர்வுக்கானது மட்டுமல்லாமல், திமுக ஆட்சி இனி செய்யப் போகிற கொடுங்கோன்மைகளுக்கான எச்சரிக்கை மணியோ என மக்கள் அஞ்சுகிறார்கள். இதனால்தான் முதல்வர் ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட வேண்டியிருக்கிறது.'' இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.