

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 100 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,600 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பம் பெறுவது கடந்த 6-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் 71, பட்டதாரி ஆசிரியர் 15, முதுகலை ஆசிரியர் 14 ஆகிய காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு மொத்தம் 3,600 பேர் விண்ணப்பித்துள்ளனர். பணி நியமனத்துக்கான வழிகாட்டுதல்படி அடுத்தடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும், என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தினர் தெரிவித்தனர்.