

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த திமுக ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல, மீண்டும் ஆட்சிக்கு திமுக வந்தால், விவசாயிகள், மாணவர் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும். திமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் அதிமுக அமைச்சர்கள் பணத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்க இருப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.