Published : 02 May 2016 09:44 AM
Last Updated : 02 May 2016 09:44 AM

தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு: துணை ராணுவத்தினர் தமிழகம் வருகின்றனர்

தேர்தல் விதிமீறல்களைத் தடுக் கும் வகையில் 200 தொகுதி களில் பறக்கும் படையினரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக் கப்படும் என்றும் தேர்தல் பாது காப்புப் பணிக்கு துணை ராணுவத்தினர் இன்று இரவு அல்லது நாளை தமிழகத்துக்கு வரவுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை கோட் டையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலுக்கு 234 தொகுதிகளில் 66 ஆயி ரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற் குத் தேவையான ஒரு லட்சத்து 52 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர் களின் எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பாலான தொகுதிகளில் 2 அல்லது 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இவற்றை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கூடுதலாக தேவைப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

புதிய வாக்காளர்களுக்கு அவர் களின் வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண், வரிசை எண் உள்ளிட்ட தகவல்கள் செல் போனில் எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) மூலமாக அனுப்பப்படு கின்றன.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப் புப் பணிக்கு 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஒதுக்கப்பட் டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 52 கம்பெனி துணை ராணுவப் படையினர் மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைக்கு வருகிறார்கள். இவர் கள் பறக்கும் படையினருடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடு படுவர். எஞ்சிய துணை ராணுவப் படையினர் 16 சிறப்பு ரயில்கள் மூலம் மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்டு சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 அல்லது 4 -ம் தேதியன்று வந்து சேருவார்கள்.

தற்போது தேர்தல் விதிமீறல் களை தடுக்கும் வகையில் தமிழ கம் முழுவதும் ஒவ்வொரு தொகுதி யிலும் 3 பறக்கும் படையினர் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். மே 2-ம் தேதி (இன்று) முதல் 200 தொகுதி களில் பறக்கும் படையினரின் எண் ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்படும்.

துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா 3-ம் தேதி சென் னைக்கு வருகிறார். இங்கிருந்து புதுச்சேரிக்கு செல்லும் அவர், மறுநாள் (4-ம் தேதி) திருச்சிக்கும் 5-ம் தேதி மதுரைக்கும், 6-ம் தேதி கோவைக்கும் சென்று தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்துகிறார். மே 2-வது வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தமிழகத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

தபால் ஒட்டுக்கான சீட்டுகள், டெண்டர் ஓட்டுச்சீட்டுகள் 3-ம் தேதி அச்சிடப்படுகின்றன. மே 6 அல்லது 7-ம் தேதியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறுகிறது. 2-வது பயிற்சி நாளில் தபால் ஓட்டுச்சீட்டுகள் அவர்களிடம் வழங்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி, பின்னர் பதிவு செய்யப்பட்ட கட்சி அதன்பிறகு சுயேச்சைகள் என்ற வரிசையில் வேட்பாளர் விவரங்கள் ஒட்டப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x