பெண் காவலர் தற்கொலைக்கு காரணம் என்ன?- டிஎஸ்பி மீது கணவர் கடும் புகார்

பெண் காவலர் தற்கொலைக்கு காரணம் என்ன?- டிஎஸ்பி மீது கணவர் கடும் புகார்
Updated on
2 min read

தாராபுரம் பெண் காவலர் தற்கொலை செய்துகொண்டதற்கு, காவல் அதிகாரி திட்டியதே கார ணம் என பெண் காவலரின் கணவர் ஆறுமுகம் குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வட மதுரை ஒன்றியம் கானப்பாடியை சேர்ந்தவர் ஆறுமுகம். கானப்பாடி ஊராட்சியில் துப்புரவுத் தொழி லாளியாக பணிபுரிந்து வருகி றார். இவரது மனைவி காயத்ரி(30) 2009-ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார். தம்பதியருக்கு கார்த்திகேயன்(9), பிரகதீஸ்வரன்(3) ஆகிய குழந்தைகள் உள்ளனர்.

தாராபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வந்த காயத்ரி, கடந்த 2 வாரங்களாக ஓய்வின்றி தொடர்ச் சியாகப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ரெஜினா பேகத்துடன், அலுவல் பணிகளை தொடர்ந்து பார்த்துவந்ததாகக் கூறப் படுகிறது. இதனால் மனச்சோர்வுடன் காயத்ரி காணப்பட்டாராம்.

இந்நிலையில், ஏப். 29-ம் தேதி மாலை, மகளிர் காவல்நிலையத் துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது விஷம் அருந்தி மயங் கிச் சரிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்த காவலர் கள் அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச் சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத் துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கோவை மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்கு அவரது சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று முன்தினம் காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டதும், சடலத்தை கணவர் ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள் சமாதானம் செய்ததன்பேரில், சடலத்தை பெற்று வடமதுரைக்கு எடுத்துச் சென்றனர்.

பணியில் நெருக்குதல்

இறந்த பெண் காவலர் காயத்ரி யின் கணவர் ஆறுமுகம் கூறியதா வது: தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் ரெஜினா பேகத் துடன், அலுவல் பணியில் சென்றதில் இருந்து, கடந்த 15 நாட்களாக பணி நெருக்குதல் காரணமாக காயத்ரி அவதிப்பட்டு வந்தார். அதைத்தவிர டிஎஸ்பி வீட்டு வேலைகளையும் அவரது சொந்த பணிகளையும் செய்ய வற்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

மேலும், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சக அதிகாரிகள் முன்னிலையில் கடிந்துகொண்டாராம். இதுகுறித்து, அங்கிருந்தபடியே என்னிடம் போனில் தெரிவித்து அழுதார். நான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தேன். இது, அவரை கடுமையாகப் பாதித்துள் ளது. இதனால் என் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதிகாரிகளின் முன்னிலையில் திட்டியதே என் மனைவியின் தற் கொலைக்கு காரணம். அவர் இறந்த தகவலைகூட தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். யாரும், போனில்கூட தகவல் அளிக்கவில்லை. உரிய நட வடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை ஏற்று சடலத்தை வாங்கிக்கொண்டு வந்து விட்டோம். முதல் தகவல் அறிக்கை யும் எப்படி போடப்பட்டுள்ளது என தெரியவில்லை என்றார்.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூரிடம் கேட்டபோது, கருத்து சொல்ல மறுத்துவிட்டார். அதேசமயம் டிஎஸ்பி ரெஜினா பேகத்தை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் அவர் தொடர்பை துண்டித்துவிட்டார்.

காயத்ரி தற்கொலை குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் துணை கண்காணிப்பாளர் ராமசாமி கூறும்போது, ‘காயத்ரியின் கணவர் கூறியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்தி அதன்பிறகே மேற்கொண்டு சொல்லமுடியும்’ என்றார்.

செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு

காயத்ரி தற்கொலை விவகாரத் தில், ஆரம்பம் முதலே அவரது மரணம் குறித்த தகவல்களை போலீஸார் ரகசியம் காத்தனர். காயத்ரிக்கு நெருக்கமான பெண் காவலர்களைகூட, அவரது கணவர் சம்பவத்தன்று சந்திக்க முடிய வில்லையாம்.

அதேபோல், தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு செய்தியாளர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரது கணவருக்கு இது வரை முதல் தகவல் அறிக்கை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in