அரியலூர் விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 13 ஆனது

அரியலூர் விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 13 ஆனது
Updated on
1 min read

அரியலூர் அருகே வெள்ளிக்கிழமை நடந்த ஓட்டக்கோயில் சாலைவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 13 ஆக உயர்ந்தது.

அரியலூரில் இருந்து செந்துறை சென்ற அரசு நகரப் பேருந்தும் தளவாயிலிருந்து எதிரே வந்த காங்கிரீட் கலவை ஏற்றிவந்த லாரியும் ஓட்டக்கோயில் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிழந்தனர்.

தொடர்ந்து மருத்துவனைக்கு செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் 5 பேர் இறந்தனர். இதனால் வெள்ளிக்கிழமை இரவு வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக பதிவானது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை நல்லாம்பாளையம் இளவரசன் என்பவரின் 8 மாத குழந்தை இறந்ததையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தோருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in