தனியார் நிறுவன அடுக்குமாடி கட்டிட பணியில் தொழிலாளர்களுக்கான வசதிகள்: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் ஜெகதீசன் ஆய்வு

சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.ஜெகதீசன், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களிடம் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.ஜெகதீசன், அங்கு பணியாற்றிய தொழிலாளர்களிடம் பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
Updated on
1 min read

சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை, கிண்டி, ஆலந்தூர் சாலையில் ஹரிநாராயணா கன்ஸ்ட்ரக் ஷன் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் 14 அடுக்குமாடி கட்டிடப் பணிகளை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கே.ஜெகதீசன் நேற்று ஆய்வு செய்தார்.

இக்கட்டுமானப் பணியிடத்தில் 250 தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆய்வின்போது, கட்டுமான வளாகத்தில் பணியில்ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் பாதுகாப்பு மற்றும் சுகாதாரவசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா? தங்குமிடத்தில் உள்ள வசதிகள் என்ன, கரோனா நோய்த் தொற்றுதொடர்பான பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மேற்கூறிய ஏற்பாடுகளை கட்டுமான நிறுவனம் பணிகள் முடியும் வரை தொடர்ந்து செய்து தரவேண்டும்என்றும், விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக பணிமேற்கொள்ளவும் கட்டுமானநிறுவனத்திடம் அவர் வலியுறுத்தினார்.

மேலும், பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் உயரத்தில் நின்று பணியாற்றும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறை பற்றியும், மின் விபத்து தடுப்பு நடைமுறைகள் குறித்தும் வலியுறுத்தினார்.

ஆய்வின்போது, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in