Last Updated : 19 May, 2016 10:37 AM

 

Published : 19 May 2016 10:37 AM
Last Updated : 19 May 2016 10:37 AM

புதுச்சேரியில் கதிர்காமத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரியில் கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். புதுச்சேரியில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தலா 4 தொகுதிகளில் இரு கட்சிகளும் முன்னிலையில் உள்ளன. மக்கள் நலக்கூட்டணி ஆதரவு வேட்பாளர் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் 5 மையங்களில் பணிகள் நடந்து வருகிறது.

வெற்றி: புதுச்சேரியில் கதிர்காமம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபால் 11690 வாக்குகள் பெற்று வென்றார். 2வதாக சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் 7888 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையே 3802 வாக்குகள் வித்தியாசம் இருந்தது. காங்கிரஸ் வேட்பாளர் சிவசண்முகம் 2601 வாக்குகள் பெற்று 3ம் இடம் பிடித்தார்.

காங்கிரஸ்: ஏனாம் பிராந்தியத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மல்லாடி கிருஷ்ணராவ் 17187 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பைரவசாமி 7925 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.

காமராஜர் நகரில் எதிர்க்கட்சித்தலைவர் வைத்திலிங்கம் 3740 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அடுத்த நிலையில் அதிமுக வேட்பாளர் கணேசன் 1856 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 7945 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 2786 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

ஏம்பலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி 198 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமி காந்தன் 71 வாக்குகளுடன் உள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ்: மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் செல்வம் 3421 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் கிருஷ்ணன் 3378 வாக்குகளுடன் அடுத்த நிலையில் உள்ளார். இருவருக்கும் இடையில் 43 வாக்குகளே வித்தியாசம் உள்ளது.

காரைக்கால் வடக்கில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் திருமுருகன் 6105 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக ஓமலிங்கம் 4576 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

மங்கலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சுகுமாரன் 4368 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் குமாரவேல் 3164 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார். நெருங்காடு தொகுதியில் பிரியங்கா 2869 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து 2117 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார்.

மாஹேயில் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ராமசந்திரன் 4676 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். அடுத்த நிலையில் 4144 வாக்குகளுடன் காங்கிரஸ் வேட்பாளர் வல்சராஜ் பின்தங்கியுள்ளார்.

30 தொகுதிகள்: புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x