

விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் கலாநிதியை ஆதரித்து மாவட்ட அதிமுக செயலாளரும் சிவகாசி தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து, ராதாகிருஷ்ணன் எம்பி ஆகியோர் விருதுநகர் அருகே உள்ள அல்லம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.10 மணியளவில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தனர். அதைத் தொடர்ந்து பாண்டியன் நகர் பகுதியிலும் அவர்கள் வாக்கு சேகரித்தனர்.
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக அமைச்சர் உட்பட 25 பேர் மீது விருதுநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.