பேருந்துகளில் பயணம் செய்யும்போது முகக்கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி

பேருந்துகளில் பயணம் செய்யும்போது முகக்கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது தொடர்பாக திருமண மண்டபங்கள், திரையரங்குகள், வணிக வளாக உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து மேலாண் இயக்குநருக்கு மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம்:

* பொதுமக்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

* கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதையும், முகக்கவசம் அணிவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

* அவ்வபோது கிருமி நாசினி கொண்டு துாய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

* திருமண மண்டபங்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.

* வணிக நிறுவனங்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவதை கண்காணிக்க பொறுப்பு அலுவலர் நியமிக்க வேண்டும்.

* பேருந்துகளில் பணியில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

* பேருந்து பயணிகள் அனைவரும் முககவசம் அணிவதை நடத்துனர் உறுதி செய்ய வேண்டும்.

* பேருந்து பணிமனைகளில் பணியாளர்கள் முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in