சென்னை - பாரிமுனை பகுதியில் குடிசைகள் அகற்றம்

சென்னை - பாரிமுனை பகுதியில் குடிசைகள் அகற்றம்
Updated on
1 min read

சென்னை பாரிமுனை முத்துசாமி சாலையில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வந்தன. இந்தப் பகுதியில் உள்ள குடிசைகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அங்கு வசித்தவர்களுக்கு மாற்று ஏற்பாடாக பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.

இதையடுத்து, வீடுகளை காலி செய்யுமாறு அவர்களுக்கு மாநகராட்சி சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. 259 குடும்பங் களுக்கு மட்டும் பெரும்பாக்கத்தில் வீடு ஒதுக்கப்பட்டதாகவும், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வீடுகள் ஒதுக்கப் பட்ட சிலர் பெரும்பாக்கத்துக்கு சென்றுவிட்டனர். வீடு ஒதுக்கப் படாதவர்கள் காலி செய்ய மறுத்துவந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அந்தப் பகுதியில் இருந்தவர்களை செவ்வாய்க் கிழமை அப்புறப்படுத்தினர். குடிசைகளை இடித்துத் தள்ளினர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் கூறும் போது, ‘‘எல்லாருடைய வீட்டுக் கதவிலும் பெரும்பாக்கத்தில் ஒதுக் கப்பட்டுள்ள வீட்டின் எண் எழுதப் பட்டது. ஆனால் இப்போது குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு மட்டும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். இங்குள்ள பல குடும்பத்தினர், வாக்காளர் அடையாள அட்டை மட்டும்தான் வைத்துள்ளனர். இந்தப் பகுதியில் குடும்ப அட்டை ரத்து செய்யப்பட்டுவிட்டது. மாற்று ஏற்பாடு செய்யாமல் எங்கள் வீடுகளை இடித்துவிட்டனர். இதனால், எங்கே போவது என்று தெரியாமல் குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கிறோம்’’ என்றார்.

குடும்ப அட்டை இல்லாதவர் களுக்கு மாற்று ஏற்பாடு குறித்து மாநகராட்சி ராயபுரம் மண்டல அதிகாரி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in