

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தமிழகத்தில் ஆளும் கட்சியும், ஆண்ட கட்சிகளும் மக்களுக்குத் தேவையான எதையும் செய்யவில்லை. ஆறுகளில் ரூ.1,000-க்கு மணலை அள்ள அனுமதி அளித்துவிட்டு, அதே மணலை ரூ.20,000-க்கு விற்கவும் அனுமதிக்கும் அரசுகளாக இயங்குகின்றன.
இவர்களால், உண்மையில் பயனடைவது யார்? மக்கள் சிந்திக்க வேண்டும். கனிம வளங்களை கொள்ளையடிக்கத் துணைபோகும் ஆட்சியாளர்களை, இந்தத் தேர்தல் மூலமாக வீட்டுக்கு அனுப்புங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.