Published : 14 May 2016 09:13 AM
Last Updated : 14 May 2016 09:13 AM

இளைஞர்களிடம் ஆதரவு இல்லை: வைகோ விரக்தி

இளைஞர்கள் 60 சதவீதம் பேரிடம் வரவேற்பு இல்லை. காரணம் அவர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து நகர் பகுதியில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று நேற்று பிரச்சாரம் செய்த வைகோ பேசியதாவது:

ஓட்டுக்குப் பணம் கொடுப் பதை தேர்தல் ஆணையம் ஒருபோதும் தடுத்தது கிடையாது. பாதிப்பேர் நமக்கு ஓட்டுப்போட மாட்டார்கள், மற்ற கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள். காரணம் பணம் போய் சேர்ந்துவிட்டது. அதனால் திமுக, அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். இவ்விரு கட்சிகளையும் மீறி வெற்றி பெற்றால் அதுதான் ஜனநாயகப் புரட்சி.

இளைஞர்கள் 60 சதவீதம் பேரிடம் வரவேற்பு இல்லை. காரணம் அவர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கிவிட்டார்கள். பணத் துக்காக ஓட்டு போட்டுவிட்டு சாக்கடை சரியில்லை, சாலை வசதி இல்லை, பேருந்து வசதி இல்லை, பாலம் கட்டவில்லை என்று கூறினால் எதுவும் வராது.

எங்கள் கூட்டணிக்கு 35 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும். 150 இடங்களில் வெற்றி பெறுவோம். நான் போட்டியிட்டபோது எனக்கே ஓட்டு போடவில்லை. இந்த தொகுதியில் ரகுராமனுக்கா ஓட்டு போடப்போகிறார்கள். நீதி, தர்மம் வேண்டும் என்றால் ஓட்டு போடுங்கள்.

எம்.ஜி.ஆர். காலத்தில் யாரும் பணம் கொடுக்கவில்லை. திமுகதான் முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது. இங்கு ஜனநாயகம் வென்றால் 6 கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x