Published : 09 May 2016 09:51 AM
Last Updated : 09 May 2016 09:51 AM

பரமக்குடி, கோவையில் அமித்ஷா இன்று பேசுகிறார்

பாஜக தலைவர் அமித்ஷா தமிழகத்தில் கடந்த வாரம் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், அமித்ஷா இன்று மீண்டும் தமிழகத்துக்கு வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று காலை 9 மணிக்கு அவர் பிரச்சாரம் செய்கிறார்.

இதையடுத்து மாலை திருப்பூர் மற்றும் கோவையில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதி வேதாரண்யத்திலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை தியாகராய நகரில் வரும் 12-ம் தேதியும், பாஜக தலைவர் அமித்ஷா சென்னையில் வரும் 13-ம் தேதியும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x