

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 900 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட், உதவி டிராப்ட்ஸ்மேன், களப் பணி உதவியாளர் ஆகிய பணிகளுக்கு 900 பேர் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக நாளை (22-ம் தேதி) நடைபெறுவதாக இருந்த எழுத்துத் தேர் வுகள் அனைத்தும் ஒத்திவைக் கப்படுகிறது. தேர்வு நடை பெறும் நாள் பின்னர் அறிவிக்கப் படும்.
மேலும் விவரங்களுக்கு >www.tangedco.gov.in/ என்ற இணையதள முகவரியில் காணலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.