

தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை இந்து விரோத சக்தியாக செயல்பட்டு வருகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமையை மீட்க பிரச்சாரப் பயணம் ஜூன் 28-ல் திருச்செந்தூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணித்து ஜூலை 31-ல் சென்னையில் நிறை வடைகிறது. இப்பிரச்சார பயணம் நேற்று ராமநாதபுரம் வந்தடைந்தது. ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்த பொதுக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.
மாநில செயலாளர்கள் சேர் மன், முத்துக்குமார், மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ், ராமநாதபுரம் மாட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.
தொடர்ந்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் கூறியதாவது:
ஏழு நாள் பிரச்சார பயணத்தில் மக்களிடம் நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து அறநி லையத்துறை இந்து விரோத சக்தியாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் அதிகம் நடக்கின்றன. சட்டம் ஒழுங்கு மோசமாக உள் ளது. நீதிமன்றம் நியமிக்கச் சொல் லியும், தமிழக கோயில்களில் 90 சதவீதம் அறங்காவலர்கள் நியமிக் கப்படவில்லை.
அறநிலையத்துறை இந்து கோயில்களின் தங்கத்தை உருக் கக் கூடாது. தேனி, திண்டுக்கல் பகுதிகளில் நக்சலைட் நடமாட்டம் உள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.