தி.மலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் குருமன்ஸ் சமூகத்தினர் உள்ளிருப்பு போராட்டம்: பழங்குடியின ஜாதி சான்று வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் சமூகத்தினர் காட்சிப்படுத்திய பொருட்களை பார்வையிட்ட கோட்டாட்சியர் வெற்றிவேல்.
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் சமூகத்தினர் காட்சிப்படுத்திய பொருட்களை பார்வையிட்ட கோட்டாட்சியர் வெற்றிவேல்.
Updated on
1 min read

திருவண்ணாமலை கோட்டாட் சியர் அலுவலகத்தில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தை குருமன்ஸ் சமூகத்தினர் நேற்று தொடங்கினர்.

பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக் கும் குருமன்ஸ் சமூகத்தினர் பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் களுக்கு, பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை. அவர்கள் கொடுத்த மனுக்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட மானுடவியல் ஆய்வுகளுக்கு பிறகும் மாற்றம் ஏற்படவில்லை. இதனால், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் குருமன்ஸ் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப் படுகின்றனர். மேலும், மேல்நிலை கல்வி மற்றும் பட்டப்படிப்புகளை தொடர முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணா மலை கோட்டாட்சியர் அலுவ லகத்தில் உள்ளிருப்பு போராட் டத்தை குருமன்ஸ் சமூகத்தினர் நேற்று தொடங்கினர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள், தங்களது குல வழக்கப்படி செய்யும் தொழில் மற்றும் கலாச்சாரங்களை பிரதி பலிக்கும் வகையில், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை காட்சிப்படுத்தினர். மேலும், குல தெய்வத்தை வணங்கி, தலையில் தேங்காய் உடைத்தனர். இந்நிகழ்வுகளை கோட்டாட்சியர் வெற்றிவேல் பார்வையிட்டார். பின்னர், அவர்கள் தங்களது குலவழக்க செயல்களை எடுத் துரைத்தனர்.

இதையடுத்து கோட்டாட்சி யரிடம் குருமன்ஸ் சமூகத்தை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தங்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன் னேற்றம் அடைய பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், அண்டை மாவட்டங் களில் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கி இருப்பதையும் சுட்டிக்காட்டினர். அவர்களது கோரிக்கையின் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அதனை ஏற்க மறுத்த குருமன்ஸ் சமூகத்தினர், ஜாதி சான்றிதழ் வழங்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்து, போராட்டத்தை தொடர்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in