Published : 04 Jul 2022 07:06 PM
Last Updated : 04 Jul 2022 07:06 PM

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ இடைவெளியில் அம்மா உணவகம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் இடைவெளியிலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் உணவகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் தரமற்ற உணவுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே பயணிகள், லாரி உள்ளிட்ட சரக்கு வாகன ஓட்டுநர்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து ஊழியர்களு்ககு குறைந்த விலையில் உணவுகள் வழங்க ஒவ்வொரு 25 கிலோ மீட்டர் தூரத்திலும் அம்மா உணவகங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும்.

சுகாதாரமான உணவை குறைந்த விலைக்கு வழங்க ஏதுவாக அம்மா உணவகங்களை அமைக்க கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். தற்போதுள்ள உணவகங்களில் கழிப்பறை வசதிகளும் முறையாக இல்லை" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யாமால், பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் மட்டும் வழக்கு தொடரப்படுள்ளது" எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x