Published : 04 Jul 2022 01:38 PM
Last Updated : 04 Jul 2022 01:38 PM
சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விலியுறுத்தியுள்ளார்.
சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனம் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக சாலைகள் அடைக்கப்பட்டிருப்பதால், ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் ஒரே ஒரு குறுகிய சாலையில் வந்து, திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இதைத்தடுக்க காவலர்கள் கூட நிறுத்தப்படவில்லை. பள்ளிக்கு முன்பாக வடிகாலுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.
இதைத் தடுக்க கூடுதல் பணியாளர்கள், எந்திரங்களை அமர்த்தி ஓரிரு நாட்களில் பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் முடியும் வரை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு விடுமுறை வழங்கும்படி நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT