

தமிழ்நாடு மக்கள் இந்தியாவுக்கு வழிகாட்டியாக உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் தெரி வித்தார்.
காட்டுமன்னார்கோவில் அருகேஉள்ள லால்பேட்டை நகர இந்தியயூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக் குமான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா, சாதனையாளர்களுக்கு சமுதாய ஒளிவிளக்கு விருது வழங்கும் விழா, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பாஜக நிர்வாகிகளை கண்டித்தும், சிறுபான்மை சமூகத்திற்கு பாது காப்பை வலியுறுத்தியும் நேற்று முன்தினம் இரவு அரசியல் விழிப் புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. நகர தலைவர் அப்துல்வாஜீத் தலைமை தாங்கினார். நகர துணைத்தலைவர் அமீருல் ஹூசைன் வரவேற்று பேசினார்.
நகர செயலாளர் முஹம்மது தைய்யூப் முஹிப்பி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மண்டல பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி தொடக்க உரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் முஹமது அபுபக்கர், மாநில பொருளாளர் ஷாஜகான், சென்னை மண்டல மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ஜெய்த்தூன், செங்கல்பட்டு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஹசன் பாத்திமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுபேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய் தீன் ஆம்புலன்ஸை அர்ப்பணித்து பேசியது:
தமிழகத்தில் மசூதி,சர்ச் ஆகியகட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்டஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் மற்ற கட்டிடங்கள் கட்டு வதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் அனுமதி தருகின்றன.சிலர் பொய் புகார்களை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவதால் மசூதி, சர்ச் கட்டிடங்கள் கட்ட இயலவில்லை. ஆகவே தமிழக முதல்வர் சர்ச், மசூதி கட்டுவதற்கான அனுமதி வழங்கும் உத்தரவினை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
கரோனா காலத்தில் இந்து சமயத்தினர் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தினரின் சட லங்களையும் அப்புறப்படுத்தியது நாம். இதுபோன்று நாம் சமுதாய ஒற்றுமையிடம் திகழ்ந்து வருகிறோம். இதே நடைமுறை தொடர வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது. தமிழ்நாடு மக்கள் அனைத்து மாநில மக்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு வழிகாட்டியாக உள்ளனர். சிறுபான்மையின மக்களுக்காக போராடக் கூடியவர் தான் தமிழக முதல்வர். சிறுபான்மை மக்களுக்கு தமிழக முதல்வர் அனைத்து விதத்திலும் பாதுகாப்பாய் இருப்பார். இப்படிப்பட்ட முதல்வர் இந்தியா முழுவதும் வர வேண்டும் என்பதே நமது விருப்பம் என்றார்.
தமிழ்நாடு மக்கள் அனைத்து மாநில மக்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர்.