கூவாகம் கிராமத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பியும், அதை மிதித்து உயிரிழந்த குழந்தையும்.
கூவாகம் கிராமத்தில் அறுந்து கிடக்கும் மின்கம்பியும், அதை மிதித்து உயிரிழந்த குழந்தையும்.

உளுந்தூர்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த குழந்தை உயிரிழப்பு

Published on

உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதி ஏழுமலை-ராசாத்திக்கு சர்வேஸ்வரசாமி(3) என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் நேற்று அருகில் உள்ள விவசாய நிலத்தில் களை எடுக்கும் வேலைக்கு சென்றிருந்தனர்.

அப்போது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சர்வேஸ்வரசாமி அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளது.இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.

பின்னர் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு, உயிரிழந்த குழந்தை உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in