

எஸ்டிபிஐ மாநில பொதுச் செய லாளர் நிஜாமுகைதீன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத் தில் 30 தொகுதியிலும், புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம். தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின் புதியதாக அமையவுள்ள அரசு எங்கள் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றிடும் வகையில் இதனை தயாரித்துள்ளோம்.
கல்வி நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டதை மாற்றி, ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்தும் அரசே இலவசமாக வழங்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும். கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும். கெயில் திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டை 3.5 சதவிகிதத்தில் இருந்து, 7 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள வக்ப் வாரிய நிலங்களை மீட்க வேண்டும். வக்ப் வாரியத்தின் மூலம் கல்லூரி தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவத்தார்.