

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் ஜூலை 11 முதல் 16 வரைதிருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர்தகுதித் தேர்வு தாள் 1, 2 தொடர்பான அறிவிப்பு, ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப் பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுதாள் 1-க்கு 2,30,878 பேர், தாள்2-க்கு 4,01,886 பேர் என 6,32,764 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பதாரர்கள், தங்க ளது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், விண்ணப்ப தாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, 2 ஆகியவற்றுக்கு விண் ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பத்தில் வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திருத்தம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக் கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது.