ஜூனில் 52.90 லட்சம் பேர் பயணம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

ஜூனில் 52.90 லட்சம் பேர் பயணம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

Published on

சென்னை மெட்ரோ ரயில்களில், ஜூன் மாதத்தில் 52 லட்சத்து 90 ஆயிரத்து 390 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் சுமார் ஒரு லட்சம் பேர் பயணித்து வருகின்றனர். மேலும், பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன்மாதத்தில் 52 லட்சத்து 90 ஆயிரத்து 390 பேர் பயணம் செய்துள் ளனர். அதிகபட்சமாக, ஜூன் 3-ம் தேதி 2 லட்சத்து 2 ஆயிரத்து 456 பேர் பயணம் செய்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் 47 லட்சத்து 87 ஆயிரத்து 846 பேர் பயணம் செய்தனர். கடந்த 2015-ம்ஆண்டு ஜூன் முதல் 2022-ம் ஆண்டு ஜூன் வரை 12 கோடியே 28 லட்சத்து 24 ஆயிரத்து 577 பேர் பயணித்துள்ளனர்,

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 13 லட்சத்து 18 ஆயிரத்து 641 பேரும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 31 லட்சத்து 65 ஆயிரத்து 340 பேரும் பயணம் செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in