

மதுரையில் புதிதாக பூங்காக்களை அமைக்க ஆர்வம் காட்டிவரும் மாநகராட்சி நிர்வாகம், ஏற்கெனவே உள்ள 202 பூங்காக்களை முறையாக பராமரிக்காததால் அவை பாழடைந்து வருகின்றன.
மதுரை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 202 பூங்காக்கள் உள்ளன. இதில் காந்தி அருங்காட்சியகம் அருகே உள்ள ராஜாஜி பூங்கா, உலக தமிழ்ச் சங்கம் அருகே உள்ள சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவை மட்டுமே ஓரளவு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது அங்கும் பராமரிப்புப் பணியில் சுணக்கம் காணப்படுகிறது. மற்ற பூங்காக்கள் முற்றிலுமாக பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவை முட்புதர் மண்டியும், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இவற்றை புதுப்பொலிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேநேரம் வைகை ஆற்றங்கரைகளில் புதிய பூங்காக்களை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
தற்போது செல்லூரில் வைகை ஆற்றங்கரையில் புதிதாக 2 பூங்காக்கள் அமைக்கப்படு கின்றன. அப்பணிகளை மாந கராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதேபோல் மேலும் சில இடங்களிலும் வைகை கரையையொட்டி பூங்காக்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு ள்ளது. பூங்காக்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு மட்டுமின்றி முதியோர் மாலை நேரங்களில் அமர்ந்து இளைப்பாறவும், அனைத்து வயதினரும் நடைப் பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்ற இடமாக உள்ளன.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு
சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக குழந்தைகளுடன் பெற்றோர் உற்சாகமாக பொழுதுபோக்க விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய நவீன பூங்காக்களை மது ரையில் ஏற்படுத்த வேண்டும் என்பது அவசியமானதுதான். அதேநேரம் ஏற்கெனவே உள்ள பூங்காக்களையும் முறைப்படி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகள் கூறியதாவது:
பரிபாடலில் மதுரையில் உள்ள வைகை ஆற்றின் படித்துறை குறித்து திருமருதமுன்துறை எனப் பாடப்பட்டுள்ளது. அதனை நினைவுகூரும் வகையில் கோச் சடையில் உள்ள வைகை கரை யில் சங்க இலக்கியப் பூங்கா அமைக்கப்படுகிறது.
அங்கு இலக்கியக் கூட்டங்கள் நடத்தும் வகையில் திறந்தவெளி கலையரங்கம் உள்ளிட்ட வசதி கள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது செல்லூர் உள்ளிட்ட வைகை கரைகளில் அமைக் கப்படுவது சிறிய அளவிலான பூங்காக்களாகும்.
மாநகராட்சி பகுதியில் உள்ள 202 பூங்காக்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணி உறுதி அளித்தார்.
அதன்படி ‘பூங்காக்கள் மேம் படுத்துதல் மற்றும் நகர்ப்புற பசுமை பகுதிகளை உருவாக்குதல்’ திட்டத் தின் கீழ் நிதி ஒதுக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது என்று கூறினர்.