Published : 01 May 2016 11:30 AM
Last Updated : 01 May 2016 11:30 AM

ஊழல், கிரானைட் மற்றும் மணல் கொள்ளை; செய்ததை சொல்லாத திமுக, அதிமுக: நல்லகண்ணு குற்றச்சாட்டு

அதிமுக, திமுக தலைவர்கள் தாங்கள் செயதவற்றில் பல வற்றை சொல்லாமல் மறைக்கி றார்கள் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திமுக, அதிமுகவின் செயல் பாடுகளும், கொள்கைகளும் ஒரே மாதிரியாகவே இருக் கின்றன. இந்த இரு கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பல நிலைகளில் பின்னடைவைச் சந் தித்தது. மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தண்ணீர் வளங்களை பன்னாட்டு குளிர் பான ஆலைகளுக்கு தாரை வார்ப்பது ஆகியவற்றில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

இந்த கட்சிகளுக்கு மாற் றாக தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதன்ப டியே இந்த இரு கட்சிக ளுக்கும் மாற்றாக மக்கள் நலக்கூட்டணியை அமைத் தோம். இக்கூட்டணியில் தேமு திக, தமாகா ஆகியவை இணைந் திருப்பதால் எங்களது பலம் அதிகரித்திருக்கிறது. எங்கள் அணிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது.

கோவில்பட்டி தொகுதியில் இரு சமூகத்தை சேர்ந்தவர்க ளிடையே மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்று இத்தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து வைகோ விலகியது சரிதான் என்று தெரிவித்திருக்கிறோம். விஜயகாந்த் தலைமையில் கூட் டணி ஆட்சி அமையும்போது ஆட்சியை நெறிப்படுத்தும் குழு அமைக்கப்படும்.

தற்போது தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா எதிர்கட்சி யினரை விரட்டி அடிக்குமாறு கூறுவது தவறு. தேர்தல் பிரச் சாரத்தில் பொறுப்பற்ற நிலை யில் யார் பேசினாலும் அது தவறுதான்.

செய்வதைத்தான் சொல்கி றோம், சொல்வதைத்தான் செய்கி றோம் என திமுக, அதிமுக தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என்று இவர்கள் செய்தவற்றில் சொல் லாமல் இருப்பவை ஏராளம். இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் காசி விஸ்வநாதன், பாளையங்கோட்டை தொகுதி மதிமுக வேட்பாளர் நிஜாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x