பணம் பட்டுவாடா செய்ய புது புது உத்திகள்: திமுக, அதிமுக மீது பிருந்தா காரத் புகார்

பணம் பட்டுவாடா செய்ய புது புது உத்திகள்: திமுக, அதிமுக மீது பிருந்தா காரத் புகார்
Updated on
1 min read

ஓட்டுக்கு பணம் வழங்க திமுக, அதிமுக கட்சிகள் புது புது உத்திகளை கண்டுபிடித்துள்ள தாக திமுக, அதிமுக மீது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் குற்றஞ்சாட்டினார்.

இதுகுறித்து அவர் மதுரை யில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி, புதிய அரசியலுக்கான தொடக்கமாக இருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளின் ஊழலால் தமிழகம் எல்லாத் துறைகளிலும் பின்தங்கியுள்ளது. முன்னேற்றம் ஏமாற்றமாகவே இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஜெய லலிதா மக்களுடைய பிரச்சி னைகளைத் தீர்க்க முயற்சிக்கவில்லை.

வன்கொடுமை, ஜாதிப் பிரச்சினை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து தமிழகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதனால், சமூகப் பொறுப்புள்ள மாநிலம் என்றால் அது தமிழகம் என்ற நிலைமை மாறி பசி, பட்டினி மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் மாநிலமாக இருக்கிறது.

இந்த தேர்தலில் வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திமுக, அதிமுகவினர் புதுபுது உத்திகளை கண்டு பிடித்துள்ளனர். அதிமுக, திமுக கட்சிகள் கொள்ளையடித்த பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து இந்த தேர்தலில் ஒட்டுக்குப் பணம் வழங்க திட்டமிட்டுள்ளனர். பெட்டிக் கடைகள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், பால் வியாபாரிகள் மூலம் வாக்குக்கு பணம் வழங்க திட்டமிட்டுள்ளனர். இதைத்தடுக்க தேர்தல் ஆணையம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கும் வகையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே செயல்படுகிறது.

முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நதி நீர் பிரச்சினை இருக்கிறது. அதில் இருக்கிற முரண்பாடுகளை நீக்கி தீர்க்கமான, சுமூகமான நிலைப்பாடுகள் எடுக்கப்பட வேண்டும். தேர்தல் கால கருத்துக் கணிப்புகள், சில அரசியல் கட்சிகளின் கருத்து திணிப்புகளாகவே உள்ளன.

இவ்வாறு பிருந்தா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in