திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16 அகதிகள் விடுதலை: அன்புமணி வரவேற்பு

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16 அகதிகள் விடுதலை: அன்புமணி வரவேற்பு
Updated on
1 min read

சென்னை: " திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 16 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருக்கிறது. பல வாரங்களாக உண்ணாநிலை, போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 16 பேரை தமிழக அரசு விடுதலை செய்திருக்கிறது. பல வாரங்களாக உண்ணாநிலை, போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்த அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்ற அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் ஒன்றாம் தேதி வலியுறுத்தியிருந்தேன். பாமகவின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

விடுதலை செய்யப்பட்ட அகதிகள் தாயகம் திரும்பவோ, தமிழகத்தில் வாழவோ விரும்பினால் அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திற்கு வந்தவர்களையும் அகதிகளாக அறிவித்து உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in