விராலிமலையில் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக அணி சேர்ப்பா?

புதுக்கோட்டை மாவடம் விராலிமலை கடை வீதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
புதுக்கோட்டை மாவடம் விராலிமலை கடை வீதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் விஜயபாஸ்ர் எம்எல்ஏ-வுக்கு எதிராக அக்கட்சிக்குள் அணி சேர்க்கை நடைபெறுகிறதா என அதிமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக உள்ளார். அவருக்கு ஆதவராக சென்னையில் கட்சிக் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏவின் தொகுதியான விராலிமலை தொகுதி முழுவதும் ஆர்.ராஜசேகரனுடன், விராலிமலை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ராஜகிரி சுப்பையா ஆகியோரது படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வரை விஜயபாஸ்கர், ராஜசேகர் ஆகியோர் இருவேறு துருவங்களாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், ஓபிஎஸ்ஸூக்கு ஆதரவாக அணி சேர்க்கப்படுவதைவிட விஜயபாஸ்கருக்கு எதிராக அணி சேர்க்கை நடைபெறுகிறதோ என அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in