Published : 06 May 2016 06:07 PM
Last Updated : 06 May 2016 06:07 PM

அதிமுக வாக்குறுதிகளை விமர்சித்த ஸ்டாலினை ட்விட்டரில் கலாய்த்த ராமதாஸ்

அதிமுக தேர்தல் அறிக்கையை விமர்சித்த திமுக பொருளாளர் ஸ்டாலினை 'காப்பியே காப்பியை பற்றி பேசுகிறதே' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்த 3 பதிவுகள்:

• "அனைத்து குடும்பங்களுக்கும் இலவச செல்பேசி: அதிமுக தேர்தல் அறிக்கை - இலவச டிவி வெடித்தது, இலவச மிக்சி வெடித்தது, இனி செல்பேசிகள் வெடிக்கும்!"

* "திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகளிடையிலான வித்தியாசம். ஒன்று 7 மாதத்திலும், இன்னொன்று 8 மாதத்திலும் காப்பியடிக்கப்பட்டது!"

* "அதிமுக தேர்தல் அறிக்கை திமுகவின் காப்பி: மு.க.ஸ்டாலின் - அட... ஒரு காப்பியே காப்பியை பற்றி பேசுகிறதே!"

இவ்வாறு ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x