Published : 02 Jul 2022 12:02 PM
Last Updated : 02 Jul 2022 12:02 PM

'ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டம்': முதலிடத்தில் காஞ்சி பட்டு: டாப் 10-ல் தமிழகத்தின் 4 பொருட்கள்

சென்னை: ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ரயில் ரயில் நிலையங்களில் அதிக விற்பனையான பொருட்களை காஞ்சிப் பட்டு முதல் இடத்தில் உள்ளது.

பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் 'ஒரு நிலையம், ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே அமைத்து வருகிறது. இதன்படி நாடு முழுதும் 5,000 ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில், அந்தந்த பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பொருட்களை தேர்வு செய்யப்பட்டு மார்ச் முதல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காஞ்சி பட்டுசேலை, மதுரையில் சுங்குடி சேலை, திருநெல்வேலியில் பனை பொருட்கள், தஞ்சாவூரில் பொம்மைகள், திருவனந்தபுரத்தில் கைவினை பொருட்கள், திருசெந்தூர் ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இந்திய அளவில் அதிக அளவு உள்ளூர் பொருட்கள் விற்பனையான ரயில் நிலையங்களில் சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் இடத்தில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் ரூ.49 லட்சத்திற்கு காஞ்சி பட்டு சேலைகள் விற்பனையாகி உள்ளது. மேலும் முதல் ரயில் நிலையங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 4 நிலையங்கள் இடம் பெற்றுள்ளது.

மதுரையில் சுங்குடி சேலைகள் ரூ. 1.59 லட்சத்திற்கும், எழும்பூரில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள் ரூ.1.49 லட்சத்திற்கும், நெல்லையில் பனை பொருட்கள் ரூ.1.24 லட்சத்திற்கும், திருச்செந்தூரில் பனை பொருட்கள் 1.07 லட்சத்திற்கும் விற்பனையாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x