அதிமுக ஆட்சியில் மின்தட்டுப்பாடு இல்லை: நாஞ்சில் சம்பத் பேச்சு

அதிமுக ஆட்சியில் மின்தட்டுப்பாடு இல்லை: நாஞ்சில் சம்பத் பேச்சு
Updated on
1 min read

மின்சாரம் இல்லாமல் இருண்ட கிடந்த தமிழகத்தில் அதிமுக ஆட்சி வந்த பிறகு மின்தட்டுப்பாடு என்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார்.

கடலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத்தை ஆதரித்து அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நேற்று முன்தினம் இரவு கடலூர் மஞ்சக்குப்பத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,''தற்போது 15வது குருஷேத்திர போர் நடக்கிறது. இந்தப் போரில் ஜெயலலிதா வெற்றிப் பெறுவது உறுதி. ஏனெனில் ஜெயலலிதாவை வீழ்த்தும் அம்பு கருணாநிதியிடம் இல்லை. திமுகவில் 2 முதல்வர் வேட்பாளர்கள் அவர்களுக்குள்ளேயே போட்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் அளித்த 54 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வாக்குறுதி அளிக்காத திட்டங்களையும் செயல்படுத்தினார். மின்சாரம் இல்லாமல் இருண்ட நிலையில் காணப்பட்ட தமிழகத்தில் தற்போது மின்வெட்டே இல்லை என்ற நிலைக்கு முதல்வர் உயர்த்தியுள்ளார்'' என்றார். முன்னதாக வேட்பாளர் சம்பத் தான் இத்தொகுதியில் செய்துள்ள திட்டப்பணிகளை பட்டியலிட்டு பேசினார்.

மேலும், திரைப்பட இயக்குநர் மனோஜ்குமாரும் பேசினார். பிரசாரத்தின் போது அதிமுக மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பன், நகர் மன்ற தலைவர் குமரன் பாலகிருஷ்ணன், தங்கமணி, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in