Published : 02 Jul 2022 07:45 AM
Last Updated : 02 Jul 2022 07:45 AM

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவு வெளியீடு: சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 54 மாணவர்கள் தேர்ச்சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 54-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சங்கர் ஐஏஎஸ்அகாடமி வெளியிட்ட செய்தி: டிஎன்பிஎஸ்சி குரூப்-1முதன்மைத் தேர்வு முடிவுகள்கடந்த 29-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. தமிழக அளவில் 137மாணவர்கள் இதில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் 54-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு செல்கின்றனர். நேர்காணல் ஜூலை 13, 14, 15-ம்தேதிகளில் நடக்கிறது.

ஜூலை 1 முதல் மாதிரி தேர்வு

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இலவச மாதிரி நேர்காணல் தேர்வு சங்கர்ஐஏஎஸ் அகாடமியில் ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. அரசு உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

நேர்முக பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் 044-43533445, 45543082 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x