‘நல்லா இருக்கு நியாயம் சீலைல போச்சாம் சாயம்’: வடிவேலு பதில்

‘நல்லா இருக்கு நியாயம் சீலைல போச்சாம் சாயம்’: வடிவேலு பதில்
Updated on
1 min read

அரசியல் குறித்த கேள்விக்கு ‘அதெல்லாம் நமக்கு எதுக்கு.. விட்டுருங்க’ என்று நடிகர் வடிவேலு பதிலளித்தார்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் 'கத்தி சண்டை' படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் தமன்னா தவிர மற்றவர்கள் கலந்துகொண்டார்கள். பூஜை முடிந்ததும் படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது வடிவேலுவிடம் ‘அரசியலில் அமைதியாகி விட்டீர்களே’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு , ‘‘நல்லா இருக்கு நியாயம்.. உன் சீலைல போச்சாம் சாயம்.. இங்கே என்ன பொதுக்குழுவா நடக்குது. அதெல்லாம் எதுக்கு நமக்கு. விட்ருங்க... நம்ம படம் பத்தி மட்டும் பேசுவோம்’’ என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் பதிலளித்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in